ஒடிசாவில்  பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை  சீரழித்த மனித மிருகத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒடிசாவை சேர்ந்த 6 வயது சிறுமியான ஷீபா தனது தாயிடம் பிஸ்கட் வேண்டுமென கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த தாய் குழந்தையிடம் காசு கொடுத்து "கடைக்கு சென்று  பிஸ்கட் வாங்கிக்கோ" என கூறியுள்ளார்.

கடைவீதிக்கு சென்ற சிறுமியிடம் நபர் ஒருவர்  தான் பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி, சிறுமி ஷீபாவை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதோடு  குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளான்.

கடைக்கு சென்ற சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் ஊர் முழுவதும் சிறுமியை தேடியுள்ளார்

பள்ளி வளாகத்திற்குள் சிறுமி ரத்த காயத்தோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் வைத்தியர்கள்  சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.