எகிப்திலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தமது கணவன்மாருக்கு விசுவாச மற்றவர்களாக உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக அந்நாட்டு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி யொன்றை அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்துள்ளனர்.

மேற்படி விமர்சனம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து 15 நாட்களுக்கு குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஒ ளிபரப்ப தொலைக்காட்சி சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விமர்சனத்தை அந்த நிகழ்ச்சியில் கலந்து .கொண்ட தமோர் அல் சொப்கி என்பவர் வெளியிட்டிருந்தார்.

திருமண வாழ்க்கை சலிப்பூட்டு வதாலேயே பெண்கள் கணவன்மாருக்கு துரோகம் செய்து ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.