தொட்டலங்க பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் களைக்கப்பட்டதையடுத்து, தொட்டலங்கவிலுள்ள ஜப்பான் - இலங்கை நட்புறவு பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. 

தொட்டலங்க பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அப் பிரதேச மக்களால் நேற்று மாலை முதல் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்போது ஜப்பான் - இலங்கை நட்புறவு பாலத்தை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று காலையும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.