இரத்­தி­ன­புரி, கேகாலை ஆகிய மாவட்­டங்­களில் எய்ட்ஸ் நோயா­ளர்களின் எண்­ணிக்­கையும் பரி­சோ­தனைக்கு உட்­ப­டுத்தப்­ப­டுவோர் எண்­ணிக்­கையும் துரி­த­மாக அதி­க­ரித்து  வரு­வ­தாக இரத்தி­ன­புரி அரச வைத்திய­சா­லையின் எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் வைத்­திய நிபுணர் காஞ்­சன உபசேன தெரி­வித்தார்.

எயிட்ஸ் நோயா­ளர்­களின் அதி­கரிப்பு மற்றும் இத­னூ­டான பாதிப்­புகள் தொடர்பில் நேற்­று­ முன்­தினம் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இத­னைக்­கு­றிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 

 இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் வரு­டாந்தம் இந்த எண்­ணிக்கை பொது­வாக நூறு பேரைத் தாண்­டி­ய­தில்லை. ஆனால் 2017 ஆம் ஆண்டு இந்த எண்­ணிக்கை 160 வரை அதி­க­ரித்­தி­ருப்­பது அவ­தா­னத்­துக்­கு­ரி­யதும் எச்­ச­ரிக்கைக்குரியதுமாகும்.

கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் போது நடுத்­தர வய­தை­யு­டை­யவர்­களே  பெரும்­பாலும் எய்ட்ஸ் நோய்க்கு  ஆட்­பட்­டி­ருந்­தனர். ஆனால் தற்­போது 24 -மற்றும் 36 வய­து­டைய இளம் பரா­யத்­தி­ன­ரிடம் எய்ட்ஸ் பரவும் விகிதம் துரி­த­மாக  அதி­க­ரித்­துள்­ளது. இலங்கை போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும்  நாடொன்­றுக்கு இந்­நி­லைமை பெரும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்தும். ஆகையால் இது தொடர்பில் அவ­தா­ன­மாக செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யமா கும். இள­வ­யது திரு­மணம்,   பாலியல் ரீதி­யான அறி­வின்மை, பாது­காப்­பற்ற பாலியல் தொடர்­புகள், ஆபி­ரிக்க நாடுக­ளுக்கு வியா­பார நோக்­க­மாக சென்று வரு­ப­வர்கள், தன்­னினச் சேர்க்­கை­யா­ளர்கள் மற்றும் விப­சார நட­வ­டிக்­கையில் ஈடுபடல்  போன்ற காரணி கள் இந்நோய் பரவுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஆகையால் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் குறிப்பிட் டார்.