கனடாவின் டொரன்டோ நகரில் பொதுமக்கள் மீது வேன் சாரதியொருவர் தனது வேனை மோதி தாக்கியதில் 10ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளை வேன் ஒன்று நடைபாதை மேல் ஏறி பொதுமக்களை இலக்கு வைத்து மோதியதை நேரில் பார்த்தாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்தை நேரில் பார்த்த பலர் குறிப்பிட்ட வேன் சாரதி வேண்டுமென்றே வேனை பொதுமக்கள் மீது செலுத்தினார் என தெரிவித்துள்ளனர்.

வேன் சாரதி தனது வாகனத்தை நிறுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை விபத்தென்றால் அவர் தனது வேனை நிறுத்த முயன்றிருப்பார் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அலெக் மினாசியன் என்ற நபரே வாகனத்தை செலுத்தி தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள கனடா பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பல மைல் தொலைவில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அலெக் மினாசியன் வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியுள்ளார்  என கருதலாம் என தெரிவித்துள்ள டொரான்டோவின் பொலிஸ் அதிகாரிகள் எனினும் தாக்குதலின் நோக்கம் என்னவென்பது இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.