போலி 5000  ரூபா  நாணயத்தாள்களுடன்  அம்பாறை தமன பிரதேசத்தில்  நேற்றிரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார்  மேலும் தெரிவித்ததாவது,

அம்பாறை தமன பிரதேசத்தில்  சைக்கிள் சென்றுக்கொண்டிருந்தவர்களிடம்  பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்  போது  அவர்களிடம்  போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்  14  இருந்தமை கண்டுபிடிக்கபட்டுள்ளமை தொடர்ந்து பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.