வடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 30 சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

பஸ் விபத்தில் பலியானவர்கள் சீனாவை சேர்ந்த சுற்றுலாவாசிகள் என தெரிய வந்துள்ளது. 

குறித்த பஸ் விபத்து தொடர்பாக  சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

"வடகொரியாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பஸ் சாலை விபத்தில் சிக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது.  இதில் எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும்" என தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள அரசு தொலைக்காட்சியின் ஆங்கில அலைவரிசை  ஒன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,

"சுற்றுலா பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர்." என தெரிவித்திருந்தது.  அதன்பின் அந்த செய்தி நீக்கப்பட்டு விட்டது.