இந்தியாவின் தமிழ் நாட்டில்  திருப்பூரில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாயை அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் மாரியம்மாள் என்பவர் கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் ராமுடன் வசித்து வந்துள்ளார்.

ராம் தனியார் கம்பனி ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ராம் தாயிடம் கூறி வந்துள்ளார். அவரது தாயும் அதற்கான முயற்சிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ராம், தனது தாயிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கடப்பாரையால் தாயை கடுமையாக தாக்கியதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். 

விடயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் ராமை கைது செய்து பொலிஸ் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.