வெலி­சறை கடற்­படை வைத்­திய சாலை­யுடன் கூடிய கடற்­படை முகாமை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீவிர சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

கோட்டை நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட விசேட அனு­ம­தி­யொன்­றுக்கு அமை­வா­கவே, புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் சிறப்புக் குழு­வொன்று இந்த சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மா­கவே இந்த சோத­னைகள் நடத்­தப்­பட்­டுள்­ளன. கடற்­ப­டை­யி­னரால் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­களும் இறு­தி­யாக பய­ணித்த கார், அந்த கடற்­படை முகாமில் உள்­ள­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வா­கவே இந்த சோத­னைகள் நடத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஏற்­க­னவே வத்­த­ளையில் வைத்து கடத்­தப்­பட்ட ஜோன்ரீட் என்­ப­வரின் வேன் திரு­மலை முகாமில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் செஸி, எஞ்­சின்கள் வேறு­வே­றாக இருந்த நிலை­யி­லேயே அது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு இர­சா­யன பகுப்­பாய்­வு­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யி­லேயே அத­னுடன் தொடர்பு­பட்ட தேவைக்­காக வெலி­சறை கடற்­படை முகாமும் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சோத­னை­யி­டப்­பட்­டுள்­ளது.

புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு இந்த சோத­னை­களை நடத்­தி­யது.

முன்­ன­தாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதிப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹமட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட தலை­ந­கரின் பல்­வேறு பிர­தே­சங்­களில் வைத்தும் கடத்­தப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை தற்­போ­தைய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய 11 ஆகும்.

கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆராச்­சி­லாகே ஜோன்ரீட் அரிப்பு, கிழக்கு அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன் கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையை சேர்ந்த கனகராஜா கஜன் ஆகியோரே கடத்தப்பட்டுள்ள ஏனையவர்களாவர்.