போதை­வஸ்து கடத்­தல்­கா­ர­ருக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் போன்று உக்­ரே­னிய கிளர்ச்­சி­யா­ளர்­களால் தண்­டனை

By Raam

17 Feb, 2016 | 08:31 AM
image

உக்­ரே­னி­லுள்ள ரஷ்ய ஆத­ரவுக் கிளர்ச்­சி­யா­ளர்கள் போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­பட்ட நப­ரொ­ரு­வ­ருக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் போன்று சித்­தி­ர­வதை செய்து மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தென் உக்­ரேனில் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள கொமுனர் நகரில் குறிப்­பிட்ட போதை­வஸ்து கடத்­தல்­காரர் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்தக் காணொளிக் காட்­சியில் மரக் கம்­ப­மொன்றில் கட்­டப்­பட்­டி­ருக்கும் குறிப்­பிட்ட நபர், தன்னை விட்­டு­வி­டு­மாறு கதறி அழு­து­கொண்­டி­ருக்க கிளர்ச்­சி­யாளர் ஒருவர் மின்­சாரக்கம்பி இணைப்பு பட்­டியால் அடிக்­கிறார்.

மேற்­படி தண்­டனை நிறை­வேற்றும் கிளர்ச்­சி­யாளர் மத்­திய ரஷ்ய நக­ரான நோவொ­ஸி­பிர்ஸ்க்­கி­லி­ருந்து உக்­ரே­னி­லுள்ள ரஷ்ய ஆத­ரவுக் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் முக­மாக கொமுனர் நக­ருக்கு வந்த ஒல்கொன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அடித்து சித்­தி­ர­வதை செய்யப்பட்ட அந்த நபர், பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்புவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29