காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டபோது 16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்.

  நுகர்வோருக்கு பொருத்தமற்ற  முறையில்  சுகாதார  பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உணவுகளை வைத்திருந்த  16  உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை  மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.