தொண்டையில் மாத்திரை சிக்கியதால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ள  சம்பவம் வெல்லாவ, ஹெங்கவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவத்தில் 2 வயதுடைய சிறுமியே உரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி காய்ச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் வைத்தியரிடம் காய்ச்சலுக்கு  சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய சிறுமிக்கு மாத்திரையொன்றின் காலவாசிப் பகுதியை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வழங்கிய மாத்திரையின் கால்வாசி சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.