முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காட்டுப்பகுதியில் நேற்று  திடீரென தீ பரவியுள்ளது.
குறித்த காட்டுப்பகுதியில் பரவிய தீயினால் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.இந்நிலையில், தீ குறித்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படை பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ பரவியமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.