மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம், Plan Srilanka, CUTTAB & WUSC ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் நடாத்தும் கணனி துறையியல் கற்கை நெறியில் கல்வி பயிலும் செவிப்புலனற்ற மாணவர்கள் இன்றைய தினம்(20-04-2018) கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு, ரஜ மாவத்தை, ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரி தலைமை காரியாலயத்தை பார்வையிட்டதுடன், பத்திரிகை அச்சிடல்,தொழில்நுட்ப அச்சீட்டு செயல்முறைகள், இணையத்தள தொழில்நுட்ப வலைத்தள செயற்பாடுகள் மற்றும் ஏனைய பத்திரிகை சார் விடயங்களையும் நேரில் பார்வையிட்டு சென்றனர்.