மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொட்டிங்ஹேம் தோட்டத்தில் நேற்று மாலை உயரமான மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

51 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.கந்தசாமி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு விறகுகளை வெட்டுவதற்கு மரத்தில் உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே விழுந்து தலையடிபட்டதினால்  உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.