கைது செய்யப்பட்ட ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரணை பதில் நீதவான் காந்தி கன்னங்கர உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் தாங்கியொன்றில் விழுந்த நபரொருவரை காப்பாற்ற சென்ற சந்தர்ப்பத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறன்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினால் ஐவரின் உயிரிழப்புக்கு காரணமாகிய குற்றச்சாட்டின் பேரில் முகாமையாளரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முகாமையாளரை நீதி மன்றில் இன்று ஆஜர் படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.