செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பென்டகன் தெரிவித்துள்ளது.

சிரியாவில் பிறந்த ஜேர்மனியரான முகமட் ஹைதர் ஜம்மர் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்ய முடியும்  என பென்டகனின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

சிரியாவிற்குள் எஞ்சியுள்ள ஐ.எஸ். அமைப்பினரை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிரியா ஜனநாயக படையணியினர் இவரை கைதுசெய்துள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.

அவர் குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நபர் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.