பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகியும், நடிகையுமான மிஷா ஷபி தனக்கு பாடகர் அலி ஜாபர் பாலியல் தொல்லை தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மிஷா ஷபி தனது ட்விட்டரில்  தனது சக பாடகர் அலி ஜாபர் தனக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த துறைக்கு புதிதாக வந்த இளம் பருவத்தில் கூட இவ்வாறனதொரு தொல்லை இருக்கவில்லை, பிரபலமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பின்பே இது நடந்தது எனவும்,  

பாடகர் அலி ஜாபருடன் பல மேடைகளில் பாடியுள்ளதாகவும் அவரின் செய்கை தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்  இதுபோன்ற செயல்களுக்கு அமைதியாக இருக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தான் பேசியுள்ளதாகவும் இதன் மூலம் தன்னைப் பார்த்து பெண்களும் வாய் மூடி அமைதி காக்காமல் துணிந்து பேசுவார்கள் என நம்புவதாகவும் என மிஷா ஷபி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.