நீரின் மேல் மோட்டார் சைக்கிளை செலுத்தி இத்தாலியின் மோட்டர் சைக்கிள் வீரரான லுகா கொழும்பு (Luca Colombo) சாதனை நிகழ்த்தியுள்ளார்.

நீரில் நீந்த பயன்படுத்தப்படும் உபகரணத்தை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொருத்தி இத்தாலியிலுள்ள 3 ஆவது பெரிய குளமொன்றில் நீரின் மீது மோட்டார்  சைக்கிளை செலுத்தி சாதனை படைத்ததோடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கொழும்பு.

இத்தாலியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சுசுகி ரக மோட்டார் சைக்கிளையே நீரின் மீது செலுத்தியுள்ள கொழும்பு, 5 நிமிடங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் 40 கடல் மைல்தூரத்தில் மோட்டார் சைக்கிளை நீரின் மீது செலுத்தி சாதனைபடைத்துள்ளார்.