நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் இன்று முதல் மீற்றர் பொருத்தப்படுவது அமுல் படுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் நலன் கருதியும் வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பதற்காகவும் மீற்றர் பொருத்தும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஆறு மாத காலத்திற்கு முன்னரே ஒப்பந்தச் சலுகையை முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கியதாகவும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சங்கத்தின் தலைவர் சிசிரா கொதாகொட தெரிவித்துள்ளார். 

எனினும், முச்சக்கரவண்டிகளின்  உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.