ஹொரணை – பெல்லபிட்டிய பகுதியில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறன்றனர்.

இன்று மதியம் 1.30 மணியளவில் தாங்கியொன்றில் விழுந்த நபரொருவரை காப்பாற்ற சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினால்  ஐவரின் உயிரிழப்புக்கு காரணமாகிய குற்றச்சாட்டின் பேரில் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முகாமையாளரை நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.