ஞானசாரரை கூட்டில் அடைத்த நல்லாட்சி அரசு ஐ.எஸ்ஸூக்கு எதிராக எதுவும் செய்யவில்லை

By Raam

17 Feb, 2016 | 11:43 AM
image

நாட்டுக்காகவும், பௌத்த மதத்துக்காகவும் குரல்கொடுத்த ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை என பொதுபலசேனா பௌத்த அமைப்பு குற்றம் சுமத்தியது. இலங்கையில் செயற்படும் ஐ.எஸ். அமைப்பினரினது செயற்பாடுகள் காரணமாக எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியது.

கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் அண்மையில் ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக 20 பக்க அறிக்கையொன்றினை பாதுகாப்புச் சபைக்கு கையளித்துள்ளார். அதில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதில் முக்கியமானது ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை தெளிவுப்படுத்தியமையாகும். பான்கீமூன் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இஸ்லாமிய ஆட்சி தெற்காசியாவில் வியாபிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் இது பரவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய வலயத்தினுள்ளே இலங்கையும் அடங்குகிறது.

தெற்காசிய நாடுகள் தமது எல்லைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் இந்த நாடுகளின் எல்லைகள் ஊடாகவே ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் பயணிக்கின்றார்கள் எனவும் பான்கீமூன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை இருக்கின்றது. இதனை நாம் 2 வருடங்களுக்கு முன்பே அரசாங்கத்துக்கு கூறி எச்சரித்திருந்தோம். நாம் அன்று கூறியதை இன்று பான்கிமூன் கூறுகிறார். அதனால் இப்போதாவது எமது நிலத்தை இஸ்லாமிய தீவிரவாதத்திடமிருந்து காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கடற்படை மற்றும் இராணுவத்தை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய...

2022-10-02 11:59:35
news-image

மருந்து பற்றாக்குறை - சத்திரகிசிச்சைகள் -...

2022-10-02 11:10:45
news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 12:08:23
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43