சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சூரிச் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இலங்கையை சேர்ந்த 12 பேர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து இரு டிரக் ரக வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.