சென்னை சுப்பர் கிங்ஸ் பங்குபற்றும் ஐ.பி.எல். போட்டியை பார்வையிடுவதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே நோக்கி படையெடுத்துள்ளனர்.
இந்தியாவில் 10 ஆவது தடவையாக இடம்பெற்றுவரும் ஐ.பி.எல். போட்டியில் 7 போட்டிகள் சென்னையில் இடம்பெறவிருந்தன.
ஆனால் கடந்த 7ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது.
அப்போது, சென்னையில் காவிரி மேலாண்மை தொடர்பில் போாராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையினால் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாதென பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதனை மீறி ஐ.பி.எல். நிர்வாகம் சென்னையில் போட்டியை நடத்தியது. அப் போட்டியின் போது போராட்டக் காரர்கள் செருப்புகளை வீசியும் கோசங்களை எழுப்பியும் போராட்டதிதில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மிகுந்த பாதிப்புக்குள்ளான ஐ.பி.எல் நிர்வாகம் சென்னையில் நடக்கவிருந்த மிகுதி 6 போட்டிகளையும் புனேக்கு இடம்மாற்றியது.
இதனை தொடர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நாளை 20 ஆம் திகதி புனேயில் இடம்பெறவுள்ளது.
இப் போட்டியை பார்வையிடுவதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் 1000 பேர் விசேட ரயில் மூலம் இன்று காலை சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
தமிழ் நாடு கிரிக்கெட் சங்கமும் சென்னை அணி ரசிகர்கள் மன்றமும் இந்த சிறப்பு ரயில் சேவையை ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது சென்னை ரசிகர்கள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஜேர்சியை அணிந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM