(ப.பன்னீர்செல்வம்)

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்து உள்ளக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஆதரவு தெரிவித்ததன் மூலம் நாம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம்.  அத்துடன்  அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட கனவு கண்டவர்களின் நோக்கம்  தவிடுபொடியாகிவிட்டது என்று  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் அல் ஹுசேனுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

பிட்டகோட்டையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலளார் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு  கூறினார்.