ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்தாட்டத்தை கரடியை கொண்டு தொடங்கி  வைத்ததற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் பியாடிரிக்கார்ஸ்க் நகரில் மாஷக் - கே.எம். டபிள்யு மற்றும் அங்கஸ்ட் அணிகளுக்கு இடையே நடந்த உள்ளூர் காப்பந்து போட்டியில் "டிம்" என்ற கரடி பார்வையாளர்களின் முன்னிலையில்  பின் கால்களில் நின்றுக் கொண்டு பார்வையாளர்களை நோக்கி கைதட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளது.

இந்தக் காட்சியை கண்ட விலங்கு நல அமைப்புகள் இது மிருகவதை என்று போட்டியை நடத்திய அதிகாரிகளை நோக்கி கண்டன குரல்களை எழுப்பியுள்ளன.

இச் சம்பவம் குறித்து விலங்கு நல அமைப்பான எலிசா ஏலன் கூறும்போது,

"இது முற்றிலும் மனிதாபிமானமற்ற செயல். கால்பந்து போட்டியில் கரடியை அடிமையை போல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்றார்.

இந் நிலையில் ரஷ்யா இந்த வருடம் உலக கால்பந்து போட்டியை நடத்த இருப்பதால் "டிம்" தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என்று தகவல் பரவியது. ஆனால் இதனை உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா மறுத்துள்ளது.