ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி உட்பட 36 பேரடங்கிய குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்றிரவு இலங்கை வந்த ஈரான் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் உட்பட 36 பேரடங்கிய குழுவினர் 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்த ஈரான் குழுவினரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி விமான நிலையத்தில் வரவேற்றார்.

வியட்நாமிற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்த ஈரானின்  சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு, சபாநாகர் கருஜயசூரியா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலரை சந்தித்துக்கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.