திக்வெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திக்வெல்ல பதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் பகையின் காரணமாகவே இக் கொலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.