இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பிக்கும்வரை அதாவது கடந்த 4ஆம் திகதிவரை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகர, பொதுநலவாய விளையாட்டுக்களில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை அதிகரிப்பதாக அறிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் அவரால் அறிவிக்கப்பட்ட வாறு தங்கப்பதக்கத்துக்கு ரூ. 50 இலட்சமும், வெள்ளிப் பதக்கத்துக்கு ரூ. 40 இலட்சமும் வெண்கலப் பதக்கத்துக்கு ரூ. 30 இலட்சமும் பரிசாக வழங்கப்படும் என்றார்.
தற்போது இலங்கை அணி 6 பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பரிசு ரூ. 190 இலட்சமாகவுள்ளது.
பொதுவாக பதக்கத்துடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு இரு நாட்களுக்குள் விளையாட்டுத்துறை அமைச்சால் பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்.
ஆனால், பொதுநலவாய போட்டிகள் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் வீரர்களுக்கான பணப்பரிசு குறித்து எதுவித தகவலும் அமைச்சால் வெளியிடப்படவில்லை.
விளையாட்டுத்துறையை பொறுப்பேற் றுள்ள புதிய அமைச்சர் பைஸர் முஸ்தபா இதுகுறித்து உடனடியாக கவனம் செலுத்து வது அவசியம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM