இன்றைய திகதியில் காலையில் எழுவது முதல் இரவு உறங்கச் செல்வது வரை ஆண், பெண், மாணவர்கள், குழந்தைகள் என வயது பாகுபாடின்றி படபடப்புக்கு அதாவது பதற்றத்திற்கு ஆளாகிறார்கள். உடனே இதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் அறிந்து கொள்ள ஆவலாகயிருப்போம்.

ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் பயமளிக்கும் சம்பவங்கள் அல்லது சூழலை எதிர்கொள்ளும் போது பதற்றம் வரும். இது இயற்கை. ஆனால் ஒரு சிலருக்கு அது போன்ற கடினமான சூழலில் இருந்து விடுபட்ட பிறகும் காரணமில்லாமல் பதற்றப்படுவார்கள். இதன் காரணமாக இவர்களின் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

பதற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். அப்படி வைத்திருக்காவிட்டால், அது தீவிரமாகி நெஞ்சு படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம், அஜீரணம், குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல்,சோர்வு, வாய் உலர்ந்து போதல், மரத்து போதல், தூக்கமின்மை என பல ஆரோக்கிய கேடுகளுக்கு அடிகோலும்.

மரபணு கோளாறுகள், மூளையில் இருக்கும் சில புரத சத்தில் ஏற்படும் சமச்சீரின்மை, மன அழுத்தம் ஆகியவை படபடப்பை ஏற்படுத்தும் காரணிகள்.  பதற்றத்திலிருந்து நாம் தான் விடுபடவேண்டும். அப்படி விடுபடமுடியவில்லை என்றால் தியானப் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக Mindful Meditationஎன்ற தியானத்தை மேற்கொண்டால் படபடப்பு நாளடைவில் குறையும். இத்தகைய தியானத்தால் கவனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது. இதனால் வலியை பொறுத்துக் கொள்ளும் சக்தி கிடைக்கிறது. மது மற்றும் புகை பழக்கங்களிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது. அத்துடன் இரத்த அழுத்தம் சீரடைவதால் பதற்றம் தணிகிறது.

டொக்டர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.