இலங்கையின் கிரிக்கெட்டை அரசியல்வாதிகள் அழிக்கின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் பாரிய குழப்பநிலையில் உள்ளது என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டினை நிர்வகிக்கும் பொறுப்பை அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்துள்ள முரளீதரன் கிரிக்கெட் குறித்த அறிவு இல்லாத அவர்கள் நாளாந்தம் இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையுடன் தொடர்புபட்ட விடயம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள முரளீதரன், நான் ஒரே நாளில் தலைசிறந்த வீரனாக மாறவில்லை, நான்கைந்து வருடங்கள் அர்ஜுண ரணதுங்க எனக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது துடுப்பாட்ட வீரர் ஒருவர் களத்தில் இறங்கும் ஒவ்வொரு தடவையும் அவர் சிறந்த முறையில் விளையாடாவிட்டால் அடுத்தபோட்டியில் அவரிற்கு இடமில்லை என தெரிவிக்கின்றனர் என முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களின் நிலைமையும் இவ்வாறானாதாகவே காணப்படுகின்றது. கடந்த ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் இலங்கை அணிக்காக 60 வீரர்கள் விளையாடியுள்ளனர். இது தொலைநோக்கம் எதுவும் இல்லாததை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM