வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே வடகொரிய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.

சில வாரங்களிற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் வடகொரியா, அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தைகளிற்கான ஏற்பாடுகளை சந்திக்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதியொருவருக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த இரகசிய எதிர்பாராத சந்திப்பு உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய மடலின் அல்பிரைட் தற்போதைய வடகொரிய ஜனாதிபதியின் தந்தையை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்

இதேவேளை, வடகொரியாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். அதற்கு நான் அங்கீகாரம் வழங்கினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.