சீதுவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் ஒருதொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துணிகரக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்ததுடன் கைத்துப்பாக்கியொன்றினையும் காண்பித்த பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

தனியார் வங்கியிலுள்ள பணத்தை கொள்ளையிட்ட குறித்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், கொள்ளையிட்ட பணம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையிலீடுபட்ட நபர்களைத் தேடும் நடவடிக்கையில் சீதுவ பொலிஸார் இறங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.