நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு மோதல்களை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய முனையும் மஹிந்தவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக குறிப்பிட்டார். 

எமது நாட்டை பாதுகாத்த படையினரின் கௌரவத்தை பாதுகாத்து யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற தலைவர்களை பாதுகாத்து அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.