ஸ்பெய்னிலிருந்து ஸ்கேட்போர்ட் (Sketeboard) க்குள் மிகவும் சூட்சுமமானமுறையில் மறைத்து தனது நண்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட  ஹான்ஸ் போதைப்பொருளை தபால் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளவதற்காக சென்ற நண்பர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நுகேகொட பகுதியில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் நண்பரொருவருக்கு ஸ்பெயினில் இருக்கும் நண்பரொருவர் விமானம் மூலம் ஸ்கேட்போர்ட் (Sketeboard) என்ற விளையாட்டு உபகரணம் ஒன்று நண்பனால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் அந்த விளையாட்டு உபகரணத்திற்குள் ஹான்ஸ் போதைப்பொருள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அவதானித்தனர்.

கொழும்பு மத்திய தபால் திணைக்களத்திற்கு பொதியை பெற்றுக்கொள்ள வந்த நண்பரை சுங்க அதிகாரிகளின் உதவியுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 இவ்வாறு ஸ்பெய்னில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட போதைப்பொருள் 1.4 கிலோ கிராம் எனவும் அதன் பெறுமதி 1.4 மில்லியன் ரூபாவெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.