சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் எதிர்வரும் மே மாதம் முதல் டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  

சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை டிஜிட்டல் முறையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய முறையானது எதிர்வரும் மே மாதம் முதல் அமுலாக்கப்படவுள்ளது. 

 பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி, பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம்.    இம்முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றலாம் 

இதன்படி, இதன் முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.