இலங்கையை சேர்ந்த சில பாதாள உலகத் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர் என சட்டம் ஒழுங்கு  அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் 20 வீதமான பாதாள உலக புள்ளிகளை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர் ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த சில மாதங்களில் பாதாள உலகத்தவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையை சேர்ந்த சில பாதாள உலக தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றவாளிகளை கைதுசெய்வது தொடர்பில் இவர்கள் மறைந்துள்ள நாடுகளின் உதவி அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.