வாகன விபத்தில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்றிரவு பொல்லத்து, மோதர சந்தியில் இடம்பெற்றுள்ளது.

காலி  - மாத்தறை பிரதான வீதியில் பொல்லத்து மோதர சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நால்வரும் பயணித்த முச்சக்கரவண்டி நேற்று இரவு வேன்னொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் குடும்பப்பெண்ணொருவர் உயரிழந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் உட்பட இரு மகள்மார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்திவருகின்றனர்.