கலேவலை, மகவெகர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள், லொரி ஒன்றுடன் மோதியதையடுத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற மாதிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பாக கலேவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(வத்துகாமம் நிருபர்)