காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்றிரவு புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் -  அநுராதபுரம்  வீதி வழியாக நேற்றிரவு 11.30 மணியளவில் சைக்கிளில் சென்ற இளைஞரையே காட்டு யானை தாக்கியுள்ளது.

குறித்த இளைஞர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.