சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இலங்கை புகையிர திணைக்களாத்தால் விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த விசேட புகையிரத சேவைகள் நாளை 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி நேர அட்டவணை வருமாறு,

குளிரூட்டப்பட புகையிரதம் காலை 9.20 மணிக்கு  மருதானையில் இருந்து தனது சேவையை ஆரம்பித்து காலை 11.50 மணிக்கு காலியை சென்றடைகின்றது.

இதேவேளை, காலியில் காலை 7.05 மணிக்கு ஆரம்பிக்கும் புகையிரத சேவை நண்பகல் மருதானையை வந்தடைகின்றது.  காலியிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் கொழும்பு கோட்டையை மாலை 5.55 மணிக்கு சென்றடைகின்றது.