யாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளதை காண கூடியதாகவுள்ளது.

மேலும் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அகற்றப்படாமல் உள்ள இவ்வெடி பொருட்களில் பல அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலி வடக்கில் 28 ஆண்டுகளின் பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணியானது மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையிலே அக் காணிகளிலேயே மேற்குறிப்பிட்ட வெடி பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.