இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகளின் தலைவருமான மனோ கணேசனை இன்று அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சு அலுவலகர்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் இரண்டாம் அரசியல் செயலாளர் டொம் சொபர் ஆகியோரும் உடனிருந்தனர். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் செயற்பாடுகள், ஜெனீவா தீர்மான பொறிமுறைகளின் முன்னெடுப்புகள், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என அமைச்சரின் செய்தி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.