கோலாகலமாக நிறைவடைந்தது பொதுநலவாய விளையாட்டு விழா : பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் ஆஸி.

Published By: Priyatharshan

16 Apr, 2018 | 03:45 PM
image

(அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா பதக்கப் பட்டியிலில் முதலிடம் பிடிக்க, இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டுகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, பொதுநலவாய விளையாட்டு விழாவில் இம்முறை அதிகப் பதக்கங்களை வென்ற இலங்கை 31 ஆவது இடத்தைப் பிடிக்க 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா இனிதே நிறைவுபெற்றது.

அவுஸ்திரேலிய குயிண்டஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றுவந்த 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலகலாமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அடுத்த 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவை இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் ஒன்றிணைந்த பொதுநலவாய விளையாட்டு போட்டித் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்றது. இந்த ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரத்துடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் நடத்தியது. 

இந்தப் போட்டித் தொடர் கடந்த நான்காம் திகதி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. ஆனாலும் போட்டிகள் ஐந்தாம் திகதியே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இம்முறை 71 அணிகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் போட்டியில் பங்கேற்றிருந்தனர். மொத்தம் 19 விளையாட்டுக்ளில் 275 பிரிவுகளின் கீழ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மொத்தம் 845 பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மூன்று பதக்கங்களும் அடக்கம்.

முதலிடத்தில் ஆஸி.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் அதிக பதக்கங்களைக் குவித்து ஆதிக்கம் செலுத்திவரும் அவுஸ்திரேலியா இம்முறையும் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துக்கொண்டது. அதன்படி 80 தங்கப்பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 59 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 198 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இரண்டவது இடத்தில் பொதுநலவாய விளையாட்டு விழாவை உருவாக்கிய நாடான இங்கிலாந்து இருக்கிறது. 45 தங்கம், 45 வெள்ளி மற்றும் 46 வெண்கலங்களுடன் 136 பதக்கங்களுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் 26 தங்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தப் பதக்க பட்டியிலில் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்று இலங்கை 31 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

கராரா விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற நிறைவு விழா அணிவகுப்பில் பல்வேறு வாணவேடிக்ககைகள் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இதில் பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின்  தலைவர் லூயிஸ் மார்ட்டின் பேசுகையில், 

போட்டிகளில் வீரர்களின் திறமைகள் சிறப்பானதாக இருந்தது. உலக சாதனைகளும் படைக்கப்பட்டன, பல சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. பொதுநலவாய விளையாட்டு விழாவின் எதிர்கலம் செம்மையாகவெ காணப்படுகின்றது என்றார்.

போட்டிகளின் ஆரம்பவிழாவில் இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைத்தார். அதேபோல் இளவரசர் எட்வர்ட் போட்டிகளை நிறைவுசெய்து வைத்தார். பொதுநலவாய விளையாட்டு விழா கூட்டமைப்பு கொடி 2022 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் பர்மிங்ஹாம் நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. 11 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வெற்றித் தோல்விகளை பங்கிட்டுக்கொண்டு பசுமையான நினைவுகளுடன் கோல்கோஸ்டிலிருந்து விடைபெற்றனர்.

ஏறுமுகத்தில் இலங்கை

1930 ஆம் ஆண்டில் முதல் முறையாக இலங்கை பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்துகொண்டிருந்தது. இதில் சிலோன் என்ற பெயரில் இங்கிலாந்து கொடியின் கீழ் இலங்கை வீரர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை முதன்முதலில் 1938ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் வில்லியம் ஹென்றிகஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப்பதககத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு நடைபெ;ற போட்டியில் டங்கன் வைட் 440 மீற்றர் தடைதாண்டி ஓடும் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்றார்.  இப்படியே ஆரம்பமான இலங்கையின் பதக்க வெற்றியானது மூன்றைத் தாண்டியதில்லை. ஆனால் இம்முறை இலங்கை அணி ஒரு வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஆறு பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.

குத்துச்சண்டையில் சாதனை

இதில் இலங்கை பெண்களுக்கான குத்துச்சண்டை வரலாற்றில் அனுஷா கொடிதுவக்கு வெண்லகப் பதக்கம் ஒன்றை வென்றுகொடுத்து பெண்களுனக்கான குத்துச்ண்டைப் பதக்க வேட்டையை தொடங்கிவைத்தார். போட்டியின் முதல் நாளிலேயே அசத்திய பளுதூக்கும் வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றுகொடுக்க இரண்டாம் நாளில் பளுதூக்கலில் முதலாவது வெள்ளி இலங்கைக்காக வெல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த குத்துச்சண்டை வீரர்கள் மூன்று பதக்ங்களை வென்றனர். இந்த இரு விளையாட்டுக்களைத் தவிர வேறு எதிலும் இலங்கைக்கு பிரகாசிக்க முடியவில்லை. 

இத்தனைக்கும் இலங்கை மேசைப்பந்து, பட்மிண்டன், றக்பி - 7, ஜிம்னாஸ்டிக், நீச்சல் என போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இதில் நீச்சல் போட்டியில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறை இலங்கை பெற்றுக்கொண்டது எனலாம். காரணம் மெத்தியூ அபேசிங்க இரண்டு போட்டிப் பிரிவுகளில் இறுதிக்கு தெரிவாகி தனது தனிப்பட்ட சாதனையை புதுப்பித்துக்கொண்டார்.

68 வருடங்களுக்குப் பிறகு

பொதுநலவாய விளையளாட்டு விழாவில் 68 வருடங்களுக்குப் பிறகு ஆண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணி உலகின் பிரபல நாட்டு வீரர்களுடன் ஓடி ஆறாமிடத்தைப் பெற்று அசத்தியது. 

ஜமைக்கா தென்னாபிரிக்காவுடன் போட்டியிட்டு இறுதிப் பொட்டிக்கு முன்னேறியதே இலங்கை வீரகர்களின் சாதனையாக கருதப்படுகிறது. இதன் இறுதிப்போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றிய வீரர் 39.37 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து ஆறாமிடத்தைப் பெற்றனர்.

இதில் தங்கப்பதக்கத்தை இங்கிலாந்து அணி வென்றது. இங்கிலாந்து போட்டிதத் தூரத்தை 38.13 செக்கன்களில் ஓடிமுடித்தனர். வெள்ளியை தென்னாபிரிக்காவும் வெண்கலத்தை ஜமைக்காவும் வென்றது.

சொந்த தூரத்தை இழந்த வீரர்

இதேவேளை ஆண்களுககான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் இலங்கை வீரர் ரணசிங்க, 74, 73.93 மீற்றர்கள் வரை ஈட்டியை எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தபோதிலும், இறுதிப்போட்டியில்  70.15மீற்றரை தாண்டாது போட்டியில் 12ஆவது இடத்தைப் பெற்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-08 20:54:43
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36