கொழும்பு, லோட்ஸ் பகுதியில் வேலையில் பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்தாரை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் குறித்தப் பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், லோட்டஸ் வீதியின் ஊடாக ஜனாதிபதி செயலக பகுதிக்கு பிரவேசித்த போதே பொலிஸார் மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.