கேரள வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார், த நியூஸ் மினிட் என்ற செய்திச் சேவைக்கு அளித்­துள்ள செவ்வியில், “கடந்த ஓணம் பண்­டி­கையின் போது, இயற்கை வேளாண்­மையில் உற்­பத்­தி­யான 81ஆயிரம் தொன் மரக்­க­றிகள், “பார்ம் ப்ரஸ் கேரளா” என்ற வர்த்தக சின்­னத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்­தது” என்று கூறி­யி­ருந்தார்.

அதே­நேரம், அமைச்சர் சுனில் குமார்  இயற்கை வேளாண்மை தொடர்பில் கேரள மாநில அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் குறித்து கருத்­துக்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்தார். அதன் பிர­காரம், ஒவ்­வொரு வீட்­டிலும் சிறி­த­ளவு மரக்­கறி வளர்ப்­ப­தற்கு ஏற்ற இடம் வேண்டும். எனவே தேவை­யான மரக்­கறி செய்­கைக்கு சிறிய இடம் இருந்­தாலே போது­மா­னது. இந்தப் போக்கு இப்­போது கேர­ளாவில் அதி­க­ரித்து வரு­கி­றது. வர்த்­தக ரீதி­யாக மரக்­கறி உற்­பத்தி செய்­ப­வர்கள், இர­ச­ாயன கிருமி நாசினி மருந்­துகள், உரத்­திற்கு பதி­லாக, இயற்கை வேளாண்மை முறையில் விவ­சாயம் செய்­வ­தற்கு ஊக்­கு­விக்­கப்­ப­டு­வார்கள்” என்றார், 

மேலும் கேரள தோட்­டக்­கலை கூட்­டுத்­தா­ப­னத்தின் கருத்­துக்­களின் பிர­காரம், கேர­ளாவில் இயற்கை வேளாண்மை அதி­க­ரித்­து­விட்­டது. சில வரு­டங்­க­ளுக்கு முன், மாநி­லத்­திற்கு தேவைப்­படும் மரக்­க­றிகளில், 60 சத­வீ­­தத்­திற்கும் அதி­க­மாக அண்டை மாநி­லங்­களில் இருந்து தரு­விக்­கப்­பட்­டன. ஆனால் தற்­போது நிலைமை மாறி­விட்­டது. 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான மரக்­க­றி­ மாநி­லத்­தி­லேயே உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது என்று குறிப்­பிட்­டுள்­ளது. 

கேரள விவ­சாய பல்­க­லைக்­க­ழகம் வெளி­யிட்ட அறிக்­கையில், கேர­ளாவில் இயற்கை வேளாண்மை முறையில் உற்­பத்தி செய்­யப்­படும் மரக்­க­றிகள் நூறு சத­வீதம் பாது­காப்­பா­னது. இயற்கை வேளாண்மை முறையில் உற்­பத்தி செய்­யப்­பட்­டவை என்ற பெயரில், சந்­தையில் விற்­பனை செய்­யப்­படும் காய்­க­றிகள், உண்­ப­தற்கு பாது­காப்­பா­னதா என்ற பரி­சோ­தனை தொடர்ந்து நடை­பெ­று­கி­றது என்று குறிப்­பட்­டுள்­ளது. 

அதே­நேரம் கல்­லூ­ரி­க­ளிலும், மத நிறு­வ­னங்­க­ளிலும் கூட இயற்கை வேளாண்மை முறையில் மரக்­கறிச் செய்கை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. குறிப்­பாக எர்­ணா­கு­ளத்தில் உள்ள ராஜ­கிரி பொறியியல் கல்­லூரி, ஸ்கொர்ட் ஹார்ட் கல்­லூரி போன்­ற­வற்றில் சுமார் மூன்று ஏக்கர் பரப்­ப­ளவில்  காய்­கறி செய்­யப்­பட்­டி­ருந்­தமை முக்­கிய விட­ய­மா­கின்­றது. அத்­துடன் மகளிர் சுய உதவிக் குழு­வான “குடும்­பஸ்ரீ” 50 ஆயிரம் ஹெக்டேயர் பரப்­ப­ளவில் இயற்கை வேளாண்மை முறையில் விவ­சாய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

இவ்­வா­றான பின்­ன­ணியில் தற்­போது அயல் மாநி­லங்­க­ளி­லி­ருந்து மரக்­க­றியை நம்பி இருக்­காது, கேர­ளாவே சுய­மாக உற்­பத்தி செய்து கொள்ளும் நிலை வரு­வ­தற்கு நீண்­ட­காலம் இல்லை. ஒரு­கட்­டத்தில் அயல் மாநி­லங்­க­ளுக்கு கேர­ளவே விற்­பனை செய்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

இவ்­வாறு இயற்கை வேளாண்மை தொடர்­பான நிலை­மைகள் இருக்­கின்­ற­போது இறப்பர் உற்­பத்தியில் முன்­னிலை வகிக்கும் இம்­மா­நிலம் அண்­மைக்­கா­ல­மாக நெருக்­க­டி­களைச் சந்­தித்து வரு­கின்­றது. இதனால் அண்­மைக்­கா­ல­மாக இந்­தி­யாவின் தேசிய இறப்பர் உற்­பத்தி அளவில் கேர­ளாவின் வகி­பாகம் குறைந்து வரு­வ­தாக கேரள இறப்பர் உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பு கவலை வெளி­யிட்­டி­ருந்­தது. 

மேலும் 2015–16 நிதி­யாண்டில் கேரள மாநி­லத்தின் இறப்­பர் உற்­பத்தி 4.38 லட்சம் தென்­னாக இருந்­தது. ஆனால் 2016-–17 நிதி­யாண்டில் உற்­பத்தி சற்று உயர்ந்து 4.55 லட்சம் தொன் அள­வி­லான இறப்பர் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. கடந்த ஆண்­டை­விட இறப்பர் உற்­பத்தி 3.87 சத­வீதம் அதி­க­ரித்த போதிலும், சர்­வ­தேச உற்­பத்­தியில் கேர­ளாவின் பங்கு 69.66 சத­வீ­த­மா­கவே உள்­ளது. 

பத்­தாண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தி­யாவின் மொத்த இறப்பர் உற்­பத்­தியில் சுமார் 92 சத­வீதப் பங்­க­ளிப்பைக் கொண்­டி­ருந்­தது. இந்தச் சரி­வுக்குக் காரணம், சிந்­துதுர்க் மற்றும் குஜாராத் உள்­ளிட்ட வட­மா­நிலப் பகு­தி­களில் இறப்பர் உற்­பத்தி அதி­க­ரித்து வரு­வ­தே­யாகும் என்று கேரள இறப்பர் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு குறிப்­பி­டு­கின்­றது. 

இறப்­பரின் விலைச் சரிவு கார­ண­மாகக் கடந்த ஐந்து வரு­டங்­க­ளா­கவே, ஒரு ஹெக்­டேய­ருக்கு உற்­பத்­தி­யாகும் இறப்­பரின் அளவு தொடர்ந்து குறைந்து வரு­கி­றது. ஆர்.எஸ்.எஸ்-4 வகை இறப்­பரின் விலை 113 ரூபா­வி­லி­ருந்து 135 ரூபா­வாக அதி­க­ரித்­தி­ருந்­தாலும் அது உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்குப் போது­மா­ன­தாக இல்லை. எனினும் மத்­திய அரசின் ஊக்கத் தொகை உள்­ளிட்ட திட்­டங்­களால் இறப்பர் உற்­பத்திப் பரப்பு அதி­க­ரித்­துள்­ளது. 

ஆனாலும், தகு­திக்­கான விளைச்சல் கிடைப்­ப­தில்லை என்­பதால் இறப்பர்; உற்­பத்­தி­யா­ளர்கள் கவ­லையில் ஆழ்ந்­துள்­ளனர். அதா­வது, உற்­பத்திப் பரப்பில் வெறும் 60 சத­வீத விளைச்சல் மட்­டுமே கிடைக்­கி­றது. உற்­பத்தி சரிவால் உற்­பத்­தி­யா­ளர்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு இத்­து­றையைச் சேர்ந்­த­வர்­களின் வேலை­வாய்ப்பும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் இலங்கை இறப்பர் உற்­பத்­தி­யா­ளர்கள் சந்­தித்து வரும் இறப்­ப­ருக்­கான நிர்­ணய விலை போன்று கேரள மாநி­லத்­திலும் நிர்­ணய விலை தொடர்­பான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இருப்­பினும் இது­தொ­டர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக கேரள இறப்பர் சபை தெரி­வித்­துள்ள அதே­நேரம் நூறு கிலோ ஆர்.எஸ்.எஸ்-4 வகை இறப்­ப­ருக்கு 12,300 ரூபா (இந்­திய ரூபா) கேள்வி உள்­ள­தா­கவும் குறிப்­பி­டு­கின்­றது. ஆர்.எஸ்.எஸ்- 3 வகை இறப்­ப­ருக்கு சர்­வ­தேச சந்­தையில் 100கிலோ­கி­ரா­முக்கு 11,129ரூபா கேள்வி உள்­ள­தா­கவும் அச்­சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இதனை விடவும் இறப்பர் உற்­பத்­தியை ஊக்­கு­விக்கும் செயற்­பா­டு­களும் முறை­யான திட்­ட­மி­ட­லுடன் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாகும். இறப்பர் ஆராய்ச்சி பிரிவு மற்றும் கல்­லூ­ரிகள் அதி­க­ளவு கரி­ச­னை­யுடன் இறப்பர் செய்­கையை சீர்­கு­லைய விடாது பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­தா­கவும் குறிப்­பி­டு­கின்­றது. 

இதே­நேரம் கேர­ளா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் இறப்பர் கைத்­தொழில் துறையை முன்­னேற்­று­வது குறித்த செயற்­பாட்டின் அடிப்­ப­டையில் சில முயற்­சிகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. குறிப்­பாக கொச்­சியில் அமைந்­துள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழத்­திற்கு இலங்­கையில் இருந்து 25இறப்பர் தொழில்­நுட்ப வல்­லு­நர்கள் வர­வ­ழைக்­கப்­பட்டு நவீன இறப்பர் தொழில்­நுட்பம் சம்­பந்­த­மான பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது. 

கைத்­தொழில் வணி­கத்­துறை அமைச்சின் கீழ் 3.7மில்­லியின் ரூபா(இலங்கை ரூபா) ஒதுக்­கீட்டின் மேற்­படி 25பேர் நவீன பயிற்­சி­களை பெற்­றி­ருந்­தனர். இந்த செயற்­பா­டா­னது 195மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான இறப்­பரை உள்ளூர் உற்­பத்­திக்­காக பயன்­ப­டுத்தும் இலங்கை  இறப்பர் சார் கைத்­தொ­ழிலை மேம்­ப­டுத்­து­வ­தற்கு கேரளா நுட்­பத்­தினை பகிர்ந்­து­கொண்­டுள்­ளது என்று குறிப்­பிட்டுக் கூற முடியும். 

மேலும் கேர­ளாவில் மிக முக்­கி­ய­மான உற்­பத்­தி­யா­க­வி­ருக்கும் மிளகு தொடர்­பாக கவ­னத்தில் கொள்­கின்­ற­போது உலகின் மிளகுத் தேவையில் 34சத­வீ­தத்­தினை வியட்­நாமும் எஞ்­சி­யதை இந்­தி­யாவும் நிறைவு செய்­கின்­றன. இந்­தி­யாவில் மிளகு உற்­பத்­தியில் கேர­ள­மா­நிலம் முதன்மை வகிக்­கின்­றது. இந்­திய மிளகு உற்­பத்­தியில் 95சத­வீத உற்­பத்தி கேர­ளாவில் நடை­பெ­று­கின்­றது. அதில் 85சத­வீத உற்­பத்­தி­யா­னது இடுக்கி மாவட்­டத்தில் நடை­பெ­று­கின்­றது. இம்­மா­வட்­டத்தின் மொத்த விவ­சாய நிலப்­ப­ரப்பில் 25சத­வீதம் அதா­வது 35ஆயிரம் ஹெக்டேயர் பரப்பில் மிளகு உற்­பத்தி மேற்­கொள்­ளப்­பட்டு  வருகின்றது. 

இவ்வாறு இருக்கையில், கேரளா, கர்நாடகா போன்ற உற்பத்தி மையங்களிலும், நுகர்வோர் சந்தையிலும் குறைவான விலையில் இறக்குமதி செய்யப்பட்ட மிளகு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக உள்நாட்டு விவசாயிகளுக்காக கறுப்பு மிளகு இறக்குமதிக்கு 70 சதவீதம் இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது. 

ஆனால், இறக்குமதி வரி விலக்குடன் 2,500 தொன் வரை இலங்கையில் இருந்து மிளகு இறக்குமதி செய்ய இந்திய, - இலங்கை ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல இறக்குமதியாளர்களும், இலங்கை வழியாக வியட்நாம் நாட்டின் மிளகை இறக்குமதி செய்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.  எனினும் இந்த ஆண்டு கேரளாவின் மிளகு உற்பத்தியானது வழமைக்கு மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே விளைச்சல் அடைந்துள்ளது. 

                       

                    (தொடரும்)