எட்டு மாதங்­க­ளுக்கு முன்னர் தனது வீட்­டி­லி­ருந்து காணாமல் போயி­ருந்த இளம் வயது சிறுமி ஒருத்தி சில தினங்­க­ளுக்கு முன்னர் குளி­யாப்­பிட்டி வைத்­தி­ய­சா­லை யில் குழந்தை ஒன்றைப் பிர­ச­வித்­துள்­ளார். இந்நிலையில் அந்தக் குழந்­தையின் தந்தை என சந்­தே­கிக்­கப்­படும் தங்­கொட்­டுவ மோருக்­கு­ளிய பிர­தே­சத்தைச் சேர்ந்த 45 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தந்தை ஒரு­வரை தங்­கொட்­டுவ பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். குறித்த சிறு­மியின் அயல் வீட்­டுக்­கா­ர­ரான கைது­செய்­யப்­பட்­டுள்ள சந்­தே­க­நபர் கசிப்பு உற்­பத்­தியில் ஈடு­பட்டு வந்­துள்­ளவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்றது.

கைது­செய்­யப்­பட்­டுள்ள சந்தேகநபர் குறித்த சிறு­மியின் வீட்­டுக்கு அடிக்­கடி சென்று வந்­துள்­ள­தோடு சிறு­மியின் பெற்­றோ­ரு­டனும் உறவை பேணி வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். 15 வயதும் ஒன்­பது மாதங்­களும் உடைய இச்­சி­றுமி கடந்த மார்ச் மாதம் தனது பெற்­றோ­ருக்குத் தெரி­யாமல் வீட்­டி­லி­ருந்து காணாமல் போயி­ருந்­துள்ளார்.

இந்­நி­லையில் கடந்த வார இறு­தியில் தங்­கொட்­டுவ மொஹொட்­டி­முல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும், பின்னர் அச்­சி­றுமி வைத்­தி­ய­சா­லையில் குழந்தை ஒன் றைப் பிர­ச­வித்­துள்­ள­தா­கவும் குளி­யாப்­பிட்டி வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் தங்­கொட்­டுவ பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து குளி­யாப்­பிட்டி வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று விசா­ரணை செய்த தங்­கொட்டு பொலிஸார் குழந்தை பிர­ச­வித்த சிறுமி கடந்த மார்ச் மாதம் தங்­கொட்­டுவ மோருக்­கு­ளிய பிர­தே­சத்­தி­லி­ருந்து காணாமல் போன சிறுமி என்­பதை உறுதிப்படுத்திக் கொண்­டுள்­ளனர். பின்னர் அச்­சி­று­மி­யிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் போது தான் பிர­ச­வித்த குழந்­தையின் தந்தை தனது ஊரில் வசிக்கும் சாராய முத­லாளி என அச்­சி­றுமி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

கைதுசெய்­யப்­பட்­டுள்ள சந்­தேகநபர் குறித்த சிறு­மியின் வீட்­டுக்கு அடிக்­கடி சென்று வந்­துள்ள நிலையில் வீட்டில் சிறுமி மாத்­திரம் இருந்த சந்­தர்ப்­பங்­களில் சிறு­மியை ஏமாற்றி பல சந்­தர்ப்­பங்­களில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்தி வந்­துள்­ள­தா­கவும், இதனால் சிறுமி கர்ப்­ப­ம­டைந்­ததால் சந்­தே­க­நபர் சிறு­மியை இர­க­சி­ய­மாக வீட்­டி­லி­ருந்து அழைத்துச் சென்று குளி­யாப்­பிட்­டியில் வீடொன்றில் தங்க வைத்திருந்ததாகவும், அங்கு அச்சிறுமிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதா கவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்ப தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.