இலங்கையில் இருந்து டுபாய்க்கு கடத்திச்செல்லப்படவிருந்த வல்லப்பட்டையுடன் 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது சுங்க அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 94 இலட்சம் ரூபா பெறுமதியான 119 கிலோ கிராம் வல்லப்படடைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.