வவுனியா பம்பைமடுவில் இன்று மதியம் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பெரியகட்டு பகுதியிலிருந்து பம்பைமடு நோக்கி பயணித்த லொறி பம்பைமடு நரசிங்கர் ஆலயத்திற்கு அருகே வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகே இருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இவ் விபத்தில் லொறியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.