ஹூடாவின் நிதான ஆட்டம் ; மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

Published By: Priyatharshan

13 Apr, 2018 | 08:30 AM
image

ஹூடாவின் நிதான  ஆட்டத்தின் உதவியுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

ஐ.பி.எல். போட்டியின் 11 ஆவது சீசனில் ஏழாவது போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற  ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.  

ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் லெவிஸ் 29 ஓட்டங்களுடனும் சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது சகா 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 6  ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தவான் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரியுடன் 45 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ஓட்டங்களுடனும் ஷகிப் அல் ஹசன் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய தீபக் ஹூடாவும், யூசுப் பதானும் நிதானமாக ஆடினர். யூசுப் பதான் 14 ஓட்டங்களுடனும் அடுத்த பந்தில் ரஷித் கான் ஓட்டமெதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரில் ஒரு ஓட்டம் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் முஸ்தபிசுர் ரகுமான். இதனால் இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் ஹூடா சிக்சர் அடித்தார். அடுத்த பந்து வைட் ஆக ஒரு ஓட்டம் கிடைத்தது. அடுத்த பந்தில் ஓட்டம் இல்லை. அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ஓட்டம் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஹூடா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27